23.

நான் எதற்காக உண்டாக்கப்பட்டேன்?

பகிர்
  1. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  2. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

மாற்கு 4:26-34

26பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது. 27 விதையானது வளரத்தொடங்கும். அது இரவும் பகலும் வளரும். அந்த மனிதன் விழித்திருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்பது முக்கியமல்ல. விதை வளர்ந்து கொண்டே இருக்கும். விதை எவ்வாறு வளர்கிறது என்பதும், அந்த மனிதனுக்குத் தெரியாது.28எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள். 29 தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார்.

30மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்?31தேவனுடைய இராஜ்யம் ஒரு கடுகு விதையைப் போன்றது. கடுகு மிகச் சிறிய விதைதான். அதை நிலத்தில் விதைக்கிறீர்கள்.32ஆனால் இதை நீங்கள் விதைத்த பிறகு அது வளர்ந்து, உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்துச் செடிகளையும் விட பெரியதாகும். அதன் கிளைகள் மிகப் பெரிதாக விரியும். காட்டுப் பறவைகள் அதன் கிளைகளில் கூடுகட்டித் தங்கமுடியும். அத்தோடு அவைகளை வெயிலில் இருந்தும் பாதுகாக்கும்” என்றார்.

33மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார்.34இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்