21.
தேவனுக்கு உங்கள் பதில் என்ன?
பகிர்
- நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
- இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
- கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
- உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
- ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
-
நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை
நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
-
நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா?
நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
- வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
-
குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர்
சொல்லச் சொல்லுங்கள்.
- ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?
மத்தேயு 13:1-9
1அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில்
சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார்.2ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார்.
மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள்.3பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார்.
இயேசு,, “ஒரு விவசாயி விதைகளை விதைக்கப் போனான்.
4 அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து
அவை யாவற்றையும் தின்றுவிட்டன.
5 சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை.
எனவே, விதைகள் வேகமாக முளைத்தன.
6 ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால்
அச்செடிகள் காய்ந்தன.7இன்னும் சில
விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின்
செடிகள் வளராதவாறு தடுத்தன.
8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து
நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில
அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன.
9 நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார்.
அதிகமாக வாசியுங்கள்
கண்டுபிடியுங்கள்
- இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
-
இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது
சங்கடப்படுத்துகிறது?
- கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
-
இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று
தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
- மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
- சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
- பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
- கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
- அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்