16.

யார் நமது எஜமான்?

பகிர்
  1. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  2. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

லூக்கா 16:1-15

1இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. 2 எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான்.

3“பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன்.4நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.

5“எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். 6 அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.

7“பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.

8“பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.

9“நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 11 உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். 12 யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.

13“ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார்.

14பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள்.15இயேசு பரிசேயர்களை நோக்கி, “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்