7.

உங்கள் சத்துருக்களை எப்படி நடத்த வேண்டும்

பகிர்
  1. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  2. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

லூக்கா 6:27-36

27“என் போதனைகளைக் கேட்கிற மக்களே உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் பகைவர்களை நேசியுங்கள். உங்களை வெறுக்கிற மக்களுக்கு நன்மை செய்யுங்கள். 28 உங்களிடம் தீயவற்றைக் கூறுகிற மக்களை ஆசீர்வதிக்குமாறு தேவனை வேண்டுங்கள். உங்களை இழிவாக நடத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை பண்ணுங்கள்.29ஒருவன் உங்களை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனை மறு கன்னத்திலும் அடிக்க அனுமதியுங்கள். உங்கள் அங்கியை யாரேனும் ஒருவன் எடுத்தால் உங்கள் சட்டையையும் அவன் எடுத்துக்கொள்ள அனுமதியுங்கள்.30உங்களிடம் கேட்கிறவனுக்குக் கொடுங்கள். உங்களுக்குரிய பொருளை ஒருவன் எடுத்துக்கொண்டால் அதைத் திரும்பக் கேட்காதீர்கள். 31 உங்களுக்குப் பிறர் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள்.

32“உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால் அதற்காக உங்களைப் புகழ வேண்டியது தேவையா? இல்லை. பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களிடம் அன்பு காட்டுகிறார்களே! 33 உங்களுக்கு நல்லதைச் செய்பவர்களுக்கு நீங்களும் நன்மை செய்தால், அவ்வாறு செய்வதற்காக உங்களைப் புகழ வேண்டுமா? இல்லை. பாவிகளும் அதைச் செய்கிறார்களே!34திருப்பி அடைத்துவிட முடிந்தவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், உங்களை அதற்காகப் புகழக் கூடுமா? இல்லை. பாவிகளும் கூட பிற பாவிகளுக்கு அதே தொகையைத் திரும்பப் பெறும்படியாக கடன் உதவி செய்கிறார்களே!

35“எனவே, பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை சிறிதும் இல்லாவிடினும் கூட கடன் கொடுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்தால் அதற்கு மிகுந்த பலனைப் பெறுவீர்கள். மகா உன்னதமான தேவனின் பிள்ளைகள் ஆவீர்கள். ஆம், ஏனெனில் பாவிகளுக்கும், நன்றியற்ற மனிதர்களுக்கும் தேவன் நல்லவர்.36உங்கள் தந்தை அன்பும் இரக்கமும் உடையவராக இருப்பது போலவே, நீங்களும் அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருங்கள்.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்