3.

ஒப்புரவாக்குதல்

பகிர்
  1. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  2. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

மத்தேயு 18:21-35

21அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து,, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.

22அதற்கு இயேசு அவனுக்கு,, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.

23,“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. 24 மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 25 ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான்.

26,“ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான்.27மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.

28,“பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான்.

29,“மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.

30,“ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார்.31மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.

32,“பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். 33 ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான்.34மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.

35,“என் பரலோகப் பிதா உங்களுக்கு என்ன செய்வாரோ அதையே அம்மன்னனும் செய்தான். நீங்கள் மெய்யாகவே உங்கள் சகோதரனையோ சகோதரியையோ மன்னிக்க வேண்டும். இல்லையெனில் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று இயேசு சொன்னார்.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்