5.

ஆவிக்குரியளவில் வளர்தல்

பின்னிட்டு பார்க்கவும்
  1. இந்த வாரத்தில் எதற்கு நன்றி கூருகின்றீர்கள்?
  2. எதனோடு போராடுகின்றீர்கள்? நாங்கள் எவ்வாறு உதவுவது?
  3. நமது சமூகம்/வளாகம்/பள்ளியில் என்ன தேவைகளைக் காண்கிறீர்கள்?

அந்த தேவைகளைக் குறித்து ஒருவருக்கொருவர் ஜெபிப்பது நல்லது.

  1. கடந்த வார பாடத்தை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?
  2. மற்றவறோடு பகிர்ந்த கதை என்ன? பதில் என்ன?
மேற்கொண்டு காண

முக்கிய வினா: இயேசுவுடன் உறவில் தொடர்ந்து நாம் வளர்வது எப்படி?

வாக்கியம்: எந்தவொரு உறவிலும் உள்ளதைப் போன்று, உரையாடலே முக்கியம். நம்மோடு உரையாட விரும்புகின்றார். நாமும் உரையாட விரும்புகின்றார்.

அப்போஸ்தலர் 2: 42-49

 42விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். 43பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். 44எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 45விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். 47விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.



  1. இந்த பகுதியில் உங்களுக்கு அர்த்தமுள்ளது உண்டா?
  2. ஏதேனும் புரிந்து கொள்ள கடினமா?
  3. இன்றைய பகுதி கர்த்தரைப் பற்றி கூறுகின்றதா? மக்களைப் பற்றி? கர்த்தரோடு உள்ள உறவைப் பற்றி?
  4. நாம் முன்பு கலந்துரையாடிய கேள்வியுடன் வேதபகுதி எவ்வாறு தொடர்புபடுகின்றது? "இயேசு உறவு வளர நாம் எவ்வாறு தொடர்ந்து?"
  5. இந்த பகுதி குறித்து கேள்வி உண்டா? கருத்துக்கள் உண்டா?
  6. இன்று கற்றதை எவ்வாறு சுருக்குவீர்கள்?
  7. இந்த பகுதி எழுதப்பட்ட போது நடைபெற்ற்தற்கும், இன்றைய சமூகத்தில், குடும்பதில், நட்பில், நாம் காண்பதர்க்கும் உள்ள ஒற்றுமையை காண்கிறீர்களா?

முடிவு:

ஜெபம் மூலமாக கர்த்தருடன் பேசி, வேதாகமம் மூலமாக அவரைக் கேட்டு, கிறிஸ்தவர்களோடு இணைந்து, இயேசுவுடன் உறவில் தொடர்ந்து வளர்ந்து, அவரை நன்றாக அறிய முடியும்.

மூன்னோக்கிப் பார்க்க

நாம் கற்றதை செயல்படுத்துவது மிக முக்கியம். மேலும்,அதனைச் செய்ய ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். சில கேள்விகள் அதைச் செய்ய உதவும்:

  1. நீங்கள் வாழ்வதை இது எவ்வாறு மாற்ற்லாம்? மாற்றும்? கர்த்தரோடு? தன்னோடு? பிறரோடு?
  2. இந்த வார உரையாடலில் இருந்து எதை உங்கள் வாழ்வில் செயல்படுத்த விரும்புவீர்கள்? அதனைச் செய்ய என்ன மாற்றம் செய்வீர்கள்?
  3. இந்த வாரம் கற்றதை யாரோடு பகிர்ந்து கொள்வீர்கள்? என்ன கூருவீர்கள்?


அச்சு அவுட்லைன் பதிவிறக்கம்
firststepswithgod.com/tam/print/5