3.

கர்த்தருடைய அன்பு மற்றும் மன்னிப்பை அனுபவிக்கிறோம்

பின்னிட்டு பார்க்கவும்
  1. இந்த வாரத்தில் எதற்கு நன்றி கூருகின்றீர்கள்?
  2. எதனோடு போராடுகின்றீர்கள்? நாங்கள் எவ்வாறு உதவுவது?
  3. நமது சமூகம்/வளாகம்/பள்ளியில் என்ன தேவைகளைக் காண்கிறீர்கள்?

அந்த தேவைகளைக் குறித்து ஒருவருக்கொருவர் ஜெபிப்பது நல்லது.

  1. கடந்த வார பாடத்தை எவ்வாறு செயல்படுத்தினீர்கள்?
  2. மற்றவறோடு பகிர்ந்த கதை என்ன? பதில் என்ன?
மேற்கொண்டு காண

முக்கிய வினா: கர்த்தரோடு தொடர்ந்து நெருக்கமான உறவை எவ்வாறு அனுபவிப்பது?

வாக்கியம்: பாவம் கர்த்தரோடு உள்ள நெருக்கத்தை பாதிக்கின்றது. ஆனால் நமது உறவு பாதுகாப்பானதே.

லூக்கா 15: 11-24

 11அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 12இளைய மகன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.

13“சில நாட்களுக்குப் பிறகு இளைய மகன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். 14அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த மகன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். 15எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த மகனை அம்மனிதன் அனுப்பினான். 16அந்த மகன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.

17“இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். 18நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். 19உங்கள் மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். 20எனவே அந்த மகன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான்.

மகன் திரும்பிவருதல்

“அந்த மகன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த மகனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். மகனை அரவணைத்து முத்தமிட்டார். 21மகன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் மகன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.

22“ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். 23நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். 24என்னுடைய இந்த மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.



  1. இந்த பகுதியில் உங்களுக்கு அர்த்தமுள்ளது உண்டா?
  2. ஏதேனும் புரிந்து கொள்ள கடினமா?
  3. இன்றைய பகுதி கர்த்தரைப் பற்றி கூறுகின்றதா? மக்களைப் பற்றி? கர்த்தரோடு உள்ள உறவைப் பற்றி?
  4. நாம் முன்பு கலந்துரையாடிய கேள்வியுடன் வேதபகுதி எவ்வாறு தொடர்புபடுகின்றது? "நாம் எப்படி தொடர்ந்து கடவுளோடு நெருங்கிய உறவு அனுபவிக்க முடியும்?"

முடிவு:

1 யோவான் 1-9

 9ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார்.



அறிக்கை செய்வது என்பது நீங்கள் தவறான ஒன்றை செய்து விட்டீர்கள் என்பதை அவரிடம் கூறி மன்னிக்கக் கேட்பது. நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டால், பாவங்களை மன்னிப்பதாக கர்த்தர் வாக்குப்பண்னியுள்ளார்.

பாவத்தை விட்டு விலகி கர்த்தரிடமாய்த் திரும்பினால், சிலுவையில் தரப்பட்ட இயேசுவின் மரணத்தினால் அவரது அன்பையும், மன்னிப்பையும் அனுபவிக்க முடியும். குற்ற உணர்வு, தண்டணை, குற்றப்படுத்துதலுக்குப் பதிலாக கர்த்தரோடு உள்ள (நெருக்கம்)சீரடையும்.

மூன்னோக்கிப் பார்க்க

நாம் கற்றதை செயல்படுத்துவது மிக முக்கியம். மேலும்,அதனைச் செய்ய ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். சில கேள்விகள் அதைச் செய்ய உதவும்:

  1. நீங்கள் வாழ்வதை இது எவ்வாறு மாற்ற்லாம்? மாற்றும்? கர்த்தரோடு? தன்னோடு? பிறரோடு?
  2. இந்த வார உரையாடலில் இருந்து எதை உங்கள் வாழ்வில் செயல்படுத்த விரும்புவீர்கள்? அதனைச் செய்ய என்ன மாற்றம் செய்வீர்கள்?
  3. இந்த வாரம் கற்றதை யாரோடு பகிர்ந்து கொள்வீர்கள்? என்ன கூருவீர்கள்?

அச்சு அவுட்லைன் பதிவிறக்கம்
firststepswithgod.com/tam/print/3