பற்றி

நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்களுக்குள்ளும் தேவனிடமும் வலுவான உறவை கட்டி எழுப்ப என் நண்பர்களின் பயணம் உதவுகிறது.

இந்தப் பயணம் பின்வரும் அடித்தளத்தின் மேல் கட்டப்படுகிறது:

 1. உங்கள் நண்பர்களைப் பற்றி கரிசனையாக இருப்பது. உங்கள் நண்பரின் உலகில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறியுங்கள். "நீ எப்படி இருக்கிறாய்?" என்பதைத் தாண்டி "உண்மையில் நீ எப்படி இருக்கிறாய்?" என்பதற்கான பதிலை அறிவதாகும்.
 2. அன்பு காட்டுவது. என் நண்பர்களின் பயணத்தில் தொலைக்காட்சியில் பார்க்கும் உணர்ச்சிகரமான அல்லது காதல் கருத்துக்களை நாங்கள் குறிக்கவில்லை. அன்பு என்பது உங்கள் சொந்த தேவைகளுக்கு மேலாக உங்கள் நண்பர்களின் தேவைகளை வைப்பதாகும். அது சிரமமாக இருந்தாலும் கூட, அது அவர்களின் நலனுக்காக செயல்படுகிறது.
 3. ஜெபம். ஜெபம் என்பது தேவனுடன் நாம் இணைவதற்கான வழியாகும். நாமே நமது சொந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நமது பிரச்சினைகள் பலவும் மிகப்பெரியது. நீடிக்கும் மாற்றத்தைக் காண கடவுள் நம் மனப்போக்கு அல்லது சூழ்நிலைகளை மாற்ற வேண்டும்.

தேவன் உங்களுக்கு முக்கியம் என்றால் நீங்கள் எடுக்க வேண்டிய நான்கு நடவடிக்கைகள் உள்ளன. இவை உங்களுக்கு புதிதாக இருக்கலாம். அது பரவாயில்லை. இது ஒரு பயணம் மற்றும் பயணத்தின் போது நீங்கள் இந்த செயல்களில் தேர்ச்சி பெறுவீர்கள்.

தேவன் உங்களுக்கு மிகவும் தொலைவில் உள்ளதால் நீங்கள் உணர்ந்தால் அல்லது அவர் உங்கள் வாழ்க்கையில் எதையும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இந்த தொகுப்பை மற்றவர்களுக்கு கொடுத்துவிடுங்கள். தங்கள் வாழ்க்கையில் தேவன் என்ன செய்கிறார் என்பதை உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களுடன் பகிர்ந்துகொள்வார். கேளுங்கள். கேள்விகளை கேளுங்கள். அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

 1. உங்கள் வாழ்க்கையில் தேவன் என்ன செய்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக இருங்கள். உங்களுடைய நண்பர்களின் அனுபவங்களுடன் பொதுவாக காணப்படும் உங்கள் கதை ஒன்றை பகிரவும் அவை அவர்கள் தங்களை அடையாளம் காண எளிதானதாக்கும். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி கருத்துக்கள் இருந்தால் உங்கள் நண்பர்கள் உங்கள் கதையை நன்றாக கவனிப்பார்கள்.
 2. உங்கள் நண்பர்கள் தேனை அனுபவிக்க விடுங்கள். அவர்களுக்கு தேவைப்படும் போது, அவர்களுக்காக நீங்கள் ஜெபிக்கலாமா எனக் கேளுங்கள். நீங்கள் ஜெபிக்கும்போது உங்கள் கண்கள் திறந்து இருக்கட்டும். அனைவருக்கும் புரியும் தினசரி வார்த்தைகளைப் பயன்படுத்தவும். இயேசுவின் நாமத்தில் ஜெபியுங்கள். நிலைமை அனுமதித்தால், உங்களுடைய நண்பரை நீங்கள் சொல்லச் சொல்ல உங்களுக்கு பின் ஜெபிக்க வையுங்கள். ஜெபத்திற்கு பதிலாக ஏதாவது தேவன் செய்தாரா என்று அவர்களிடம் கேளுங்கள்.
 3. தேவனிடம் உங்கள் நண்பரை இணைத்துவிடுங்கள். தேவன் தூரமாய் இல்லை என்றும் அவர்கள் தம்மிடம் இணையும்படி அவர் காத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். நீங்கள் எப்படி இயேசுவின் சிஷரானீகர்கள் என்பதை கூட சொல்லலாம். அவர்கள் எப்படி தேவனுடைய நண்பராவது என்று கற்றுக்கொள்ள விரும்பினால் நீங்கள் அவர்களுக்கு காண்பிக்கலாம் this outline or draw this picture.
 4. வெளிவிடுங்கள்.தங்கள் நண்பர்களுக்கு அவர்கள் எப்படி தேவனுடைய நண்பராவது என்பதைச் சொல்லும்படி உங்கள் நண்பரை உற்சாகபடுத்துங்கள்.

உங்களுடைய நண்பர்களில் ஒன்று அல்லது இரண்டு பேர் சேர்ந்து தேவனுடைய கதையை அறிய விரும்பும்போது:

 1. குழுவை ஆரம்பியுங்கள். தொடர்ந்தேர்ச்சியாக தேவனைப் பற்றி கலந்துரையாட அவர்கள் விரும்புகிறார்களா என்று உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள். நீங்கள் வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை அல்லது சில விசேஷ நாட்களில் கூடலாம். சுருக்கமான வரையறைகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறோம் Life Issues
 2. அடிப்படைகளை கண்டுபிடியுங்கள். . தேவனுடைய கதையை அறிய விரும்புகிறவர்கள் மூன்றிலிருந்து ஏழுபேர் கொண்ட குழுவாக ஆகும்போது, நீங்கள் இதை ஆரம்பிக்கலாம் The Basics.
 3. கொண்டாடுங்கள். நமக்கு முக்கியமனவர்களிடையே நமது வாழ்வின் முக்கியமானத் தீர்மானங்களை நாம் கொண்டாடுவோம். இயேசுவை பின்பற்றப் போகிறோம் என்ற தீர்மானம் ஞானஸ்நானத்தில் கொண்டாடப்படும். இங்கே how to organise a baptism party நீங்கள் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தை எப்படி எங்கு கொண்டாட்டத்திற்கு அழைக்கலாம் என்ற சில ஆலோசனைகள் உள்ளது.
 4. சமுதாயமாக வாழ்வது:ஒரே பயணத்தை தொடரும் நண்பர்களுடன் சேர்ந்து வாழும்போது விவாசம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்படும். நீங்கள் outline

பயணம் ஒன்றை முடித்தப்பின் எந்த வேதபகுதியையும் தியானிக்கப் பயன்படுத்தும் ஒரு வழிமுறை இங்கு உள்ளது.

இந்த பயணத்தின் படிகளின் ஒரு நினைவூட்டலாக பணியாற்றக்கூடிய ஒரு நாணயம் இங்கே உள்ளது

என் நண்பர்கள் பயணம் பற்றிய கூடுதல் தகவலுக்கு visit our website

 

Version 0.8