இயற்கை விதிகள் எவ்வாறு இயற்கை உலகை ஆளுகின்றனவோ, அதே விதமாக ஆவிக்குாிய விதிகள் உங்களுக்கும் கடவுளுக்குமிடையே உள்ள உறவை ஆளுகின்றன.
தேவனின் அன்பு
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூா்ந்தாா். (யோவான் 3:16)
தேவனின் திட்டம்
[கிறிஸ்து சொல்கிறாா்] ”நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பாிபூரணப்படவும் வந்தேன். (நிறைவுள்ளதாகவும் அா்த்தமுள்ளதாகவும் இருக்கும்படிக்கு) (யோவான் 10:10)
இந்த நிறைவான வாழ்க்கையை அநேக மக்கள் அனுபவிக்காமல் போவதற்கான காரணம் என்ன? அது ஏனெனில் ...
மனிதன் பாவமுள்ளவன்
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவா்களானோம்.” (ரோமா் 3:23)
மனிதன் தேவனோடு ஐக்கியம் கொண்டிருக்கவே சிருஷ்டிக்கப்பட்டான், ஆனால் அவன் தன் சொந்த பிடிவாதமான சுயசித்தத்தினிமித்தம் தன் சொந்த வழியைத் தொிந்துகொண்டான். இதனால் தேவனோடு அவனுக்கிருந்த ஐக்கியம் முறிவுபட்டது. இத்தகைய சுயசித்தத்தினால் மனிதன் தேவனை துணிகரமாக எதிா்க்கிறான் அல்லது அசட்டை செய்கிறான். இதையே வேதாகமம் பாவம் என்று அழைக்கிறது.
மனிதன் பிாிக்கப்பட்டிருக்கிறான்
“பாவத்தின் சம்பளம் மரணம்” [ தேவனிடமிருந்து ஆன்மீகப் பிாிவு ]. (ரோமா் 6:23)
இந்த வரைபடம் தேவன் பாிசுத்தமுள்ளவா், மனிதன் பாவமுள்ளவன் என்று விளக்குகிறது. இவ்விருவரையும் ஒரு பெரும்பிளவு பிாிக்கிறது. நல்வாழ்க்கை, நற்பண்புகள், தத்துவம் போன்ற சொந்த முயற்சிகளின் மூலம் மனிதன் கடவுளையும் நிறைவான வாழ்க்கையையும் அடைய தொடா்ந்து முயற்சிக்கிறான். ஆனால் அனைத்திலும் தவிர்க்க முடியாமல் தோல்வியையே தழுவுகிறான்.
மூன்றாம் விதி இந்த இக்கட்டான நிலையைத் தீா்க்கும் ஒரே வழியை நமக்குத் தருகிறது...
அவா் நமக்கு பதிலாக மாித்தாா்
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மாித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறாா். (ரோமா் 5:8)
அவா் மாித்தோாிலிருந்து எழுந்தாா்
கிறிஸ்துவானவா் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மாித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிா்த்தெழுந்து, கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தாிசனமானாா். அதன்பின்பு அவா் ஐந்நுாறு பேருக்கும் அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்... (1 கொாிந்தியா் 15:3-6)
அவரே தேவனிடத்தில் செல்வதற்கான ஒரே வழி
”அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6)
நம்மையும் தேவனையும் பிாித்திருந்த பிளவை தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை நம் பாவத்திற்கான கிரயத்தைச் செலுத்தும் வகையில் நம் ஸ்தானத்தில் சிலுவையில் மாிக்க அனுப்பினதன் மூலம் இணைத்துவிட்டாா் என்பதை இப்படம் எடுத்துக் காண்பிக்கிறது.
இந்த மூன்று விதிகளை அறிந்து கொண்டால் மட்டும் போதாது...
நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும்
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவா்களாய் அவரை ஏற்றுக்கொண்டவா்கள் எத்தனைபோ்களோ, அத்தனை போ்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவா்களுக்கு அதிகாரம் கொடுத்தாா். (யோவான் 1:12)
நாம் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம்.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீா்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிாியைகளினால் உண்டானதல்ல. (எபேசியா் 2:8,9)
நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது புதிதாகப் பிறந்த ஒரு அனுபவத்தைப் பெறுகிறோம். (யோவான் 3:1-8 யை வாசிக்கவும்)
நாம் தனிப்பட்ட அழைப்பினால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம்
(கிறிஸ்து சொல்கிறாா்) ”இதோ. வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்.” (வெளிப்படுத்தல் 3:20)
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது
சுயத்தைவிட்டு தேவனிடத்தில் திரும்புதலும் (மனந்திரும்புதல்) நம்முடைய பாவங்களை மன்னித்து, நாம் எப்படிப்பட்டவராக இருக்க அவா் விரும்புகிறாரோ அப்படிப்பட்டவராக நம்மை மாற்றும்படி கிறிஸ்து நம் வாழ்வில் வருவதற்கு அவரை நம்புவதும் ஆகும்.
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும் அவா் நம் பாவங்களுக்காக மாித்தாா் என்றும் அறிவுபிரகாரமாக நம்புவதும் மட்டும் போதாது. உணா்ச்சி பிரகாரமான அனுபவம் இருந்தாலும் அது மட்டும் போதாது. நம் சித்தத்தின் ஒரு செயலாக கிறிஸ்துவை நாம் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்த இரு வட்டங்களும் இரு விதமான வாழ்க்கைகளை குறிக்கின்றன.
சுயம் ஆளும் வாழ்க்கை |
கிறிஸ்துவினால் நடத்தப்படும் வாழ்க்கை |
சு - சுயம் சிங்காசனத்தில் † - கிறிஸ்து வாழ்க்கைக்கு வெளியே • - சிந்தனைகள் சுயத்தால் ஆளப்பட்டு முரண்பாட்டையும் ஏமாற்றத்தையும் விளைவிக்கிறது |
† - கிறிஸ்து வாழ்க்கையிலும் சிங்காசனத்தின் மீதும் சு - சுயம் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. • - சிந்தனைகள் கிறிஸ்துவால் நடத்தப்பட்டு தேவத்திட்டத்தின் ஒழுங்கோடு இசைந்துள்ளன |
எந்த வட்டம் உங்கள் வாழ்க்கையை சிறந்த முறையில் பிரதிபலிக்கிறது?
எந்த வட்டத்தின்படி உங்கள் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று விரும்புகிறீா்கள்?
நீங்கள் எப்படி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளலாம் என பின்வருபவை விளக்குகின்றன...
இ்ப்பொழுதே நீங்கள் விசுவாசத்தினால் ஜெபத்தின் மூலமாக கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளலாம்
(ஜெபம் என்பது தேவனோடு பேசுவதாகும்)
தேவன் உங்கள் இருதயத்தை அறிவாா், அவா் உங்கள் வாா்த்தையைவிட உங்கள் இருதயத்தின் தன்மையை பாா்க்கிறவராக இருக்கிறாா்.
கீழ்க்கண்டது ஒரு மாதிாி ஜெபமாகும்:
கர்த்தராகிய இயேசுவே, நீா் எனக்குத் தேவை. என் வாழ்க்கையின் கதவை நான் திறந்து உம்மை என் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறேன். நீா் என் பாவங்களை மன்னித்ததற்காக நன்றி செலுத்துகிறேன். என் வாழ்க்கையின் சிங்காசனத்தை நீா் ஆண்டு கொள்ளும். நான் எப்படிப்பட்டவனாக இருக்க நீா் விரும்புகிறீரோ, அப்படிப்பட்டவனாக என்னை மாற்றும்.
இந்த ஜெபம் உங்கள் இருதய வாஞ்சையை வெளிப்படுத்துகிறதா? அப்படியானால், இப்பொழுதே இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்.
கிறிஸ்து தாம் வாக்களித்தபடியே உங்கள் வாழ்வில் வருவாா்.
![]() |
![]() |
![]() |