நமக்கு முக்கியமனவர்களிடையே நமது வாழ்வின் முக்கியமானத் தீர்மானங்களை நாம் கொண்டாடுவோம். இயேசுவை பின்பற்றப் போகிறோம் என்ற தீர்மானம் ஞானஸ்நானத்தில் கொண்டாடப்படும்.
இங்கு ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை கூறியிருக்கிறோம் 10: புது வாழ்வு
ஏன் நீங்கள் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தை அழைத்து ஒரு ஞானஸ்நான விருந்து ஏற்பாடு செய்யக் கூடாது? அது ஞானஸ்நானத்திற்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கும் அத்துடன் இயேசுவை விசுவாசிக்காத உங்கள் நண்பர்களுக்கு அவரை சந்திக்கும் ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தும்.
இது இயேசு எவ்வாறு ஞானஸ்நானம் என்பதைக் காண்பிக்கிறது.
நீங்கள் உங்கள் ஞானஸ்நான விருந்தை திட்டமிட இங்கே சில கேள்விகளும் குறிப்புகளும் உள்ளது:
- நீங்கள் யாரை அழைக்க விரும்புகிறீர்கள்?
- அவர்கள் வருவதற்கான ஏற்ற நேரம் எது?
- எந்த இடம் அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்?
- ஞானஸ்நானத்திற்கான தண்ணீரை எங்கு காண்பீர்கள்? குளத்திலா? சமுத்திரத்திலா? ஞானஸ்நானத் தொட்டியிலா? குண்டானிலா?
- யார் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அது உங்களோடு கூட விசுவாசப் பயணம் செய்யும் உங்கள் நண்பர்களில் ஒருவராக இருக்கலாமா?
- ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன் உங்கள் ஆவிக்குரிய பயணத்தின் ஒரு பகுதியை உங்கள் குழுவிற்கு அறிவிக்கலாம். சொல்ல வேண்டியதை முன்கூட்டியே எழுதி வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.
- யாராவது ஒருவர் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல வேண்டுமா?
- “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” நாம் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று வேதாகமம் போதிக்கிறது.
- ஞானஸ்நானத்திற்கு பின்பு உங்களுக்கு ஒரு துண்டும் மாற்று வஸ்த்திரமும் தேவைப்படும்.
- உணவு கொடுக்க விரும்புகிறீர்களா? எத்தகைய உணவு?
- உங்கள் ஞானஸ்நானத்தைக் குறித்து உங்கள் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்? அவர்களில் யார் யார் இயேசுவைக் குறித்து மேலும் அறிய விரும்புகிறார்கள்?