10.

புது வாழ்வு

பகிர்
  1. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  2. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு எது மிகவும் உதவியாக இருக்கும்?
  3. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
  4. அவர்களுக்காக ஜெபியுங்கள்
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

ரோமர் 6:3-14

3நாம் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றதும் கிறிஸ்துவுக்குள் ஒரு பாகமாகிவிட்டோம். நமது ஞானஸ்நானத்தின் மூலம் அவரது மரணத்திலும் பங்குபெற்றுவிட்டோம்.4ஆகையால் நாம் ஞானஸ்நானம் பெறும்போதே கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்த வழியில் இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழத் தொடங்குகிறோம். இதே வழியில் கிறிஸ்து, பிதாவின் மகிமையால் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.

5கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம்.6நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம். 7 எனவே, மரணமடைந்தவன் பாவத்திலிருந்தும் விடுதலையடைகிறான்.

8நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும். 9 கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது! 10 அவர் பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். இப்போது அவருக்கு தேவனோடு புதிய வாழ்க்கை உள்ளது.11அவ்வாறே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.

12ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக. 13 நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.14பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்
குறிப்புகள்

பின்வரும் வேதபாடம் ஞானஸ்நானம் பற்றியது. "ஞானஸ்நானம்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை விளக்க வேண்டியது முக்கியம் ஏனென்றால், "ஞானஸ்நானம்" என்ற வார்த்தை இன்று பல விதமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

அவர்கள் "ஞானஸ்நானம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது பல்வேறு மக்கள் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கிறார்கள். இங்கே சில உதாரணங்கள்:

  • ஒரு குழந்தைக்கு கடவுளின் ஆசீர்வாதத்தைக் கேட்பது
  • ஜென்ம பாவம் கழுவுதல்
  • உங்கள் மத அடையாளத்தை வரையறுத்தல்
  • ஒரு குழந்தைக்கு பெயரிடுதல்
  • ஞானத்தந்தை / ஞானத்தாய் உருவாக்குவதற்கான விழா

இவை அனைத்தும் ஞானஸ்நான "வகைகள்" தங்கள் சொந்த உரிமையில் இடம் பெற்றுள்ளன, ஆனால் அது ஞானஸ்நானம் என்று இங்கு அர்த்தமாகாது. நமது இன்றய வேதப்பகுதியில், ஞானஸ்நானம் என்பது "அடையாளப்படுத்துவது" அல்லது "பங்கேற்பது" என்று அர்த்தம் ஆகும்.

யோர்தான் நதியில் இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய சுவிசேஷ செய்தியுடன் அடையாளம் காண விரும்பிய பெரியவர்களுக்கு அவருடைய சீடர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். ஞானஸ்நானம் என்பது நனைவதைவிட அதிகமான காரியத்தை உள்ளடக்கி இருக்கிறது. இந்த பாடத்தில் நாம் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.