5.

ஒரு புது உடன்பாடு

பகிர்
  1. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  2. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு எது மிகவும் உதவியாக இருக்கும்?
  3. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
  4. அவர்களுக்காக ஜெபியுங்கள்
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

எரேமியா 31:31-34

31கர்த்தர், “இஸ்ரவேலின் குடும்பத்தோடும் யூதாவின் குடும்பத்தோடும் புதிய உடன்படிக்கையைச் செய்யக்கூடிய நேரம் வந்துக்கொண்டிருக்கிறது.32இது அவர்களது முற்பிதாக்களிடம் ஏற்படுத்திய உடன்படிக்கை போன்றதல்ல. அது, அவர்களை நான் கையில் எடுத்து எகிப்துக்கு வெளியே கொண்டு வந்தபோது செய்தது. நான் அவர்களுக்கு ஆண்டவராக இருந்தேன். ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கையை உடைத்தனர்” என்றார். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.

33“எதிர்காலத்தில், நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது போதனைகளை அவர்களது மனதில் வைப்பேன். நான் அவற்றை அவர்களின் இருதயத்தின் மேல் எழுதுவேன். நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள்.34ஜனங்கள் தமது அயலவர்க்கும் உறவினர்க்கும் கர்த்தரை அறிந்துக்கொள்ள கற்பிக்கமாட்டார்கள். ஏனென்றால், முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை என்னை அறிவர்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களை அவர்கள் செய்த தீயவற்றுக்காக மன்னிப்பேன். நான் அவர்களது பாவங்களை நினைவுக்கொள்ளமாட்டேன்.”


அதிகமாக வாசியுங்கள்

ஏசாயா 59:1-2

1பார், உன்னைக் காப்பாற்ற கர்த்தருடைய வல்லமை போதுமானதாக உள்ளது. நீ அவரிடம் உதவி கேட்கும்போது அவர் உனக்குப் பதில் தருவார்.2ஆனால் உனது பாவங்கள் உன்னை தேவனிடமிருந்து விலக்குகிறது. உனது பாவங்கள் கர்த்தருடைய முகத்தை உன்னிடமிருந்து மறையச் செய்கிறது. அப்போது அவர் உனக்குச் செவி கொடுக்கமாட்டார்.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்
குறிப்புகள்

நேர்மையாக சொல்லுங்கள். பத்து கட்டளைகளை உங்களால் கடைபிடிக்க முடிகிறதா அல்லது தொடர்ந்து மீறுகிறீர்களா? இந்த விதிகள் தீமைக்கு எதிராக போராட முடியும், ஆனால் முற்றிலும் ஒழிக்க முடியாது. மனிதர்கள் தீமையிலிருந்து விடுபடவில்லை என்பது உண்மை மற்றும் நாம் நம்மை மாற்ற முடியாது என்பதும் உண்மை.

அதனால்தான், ஒரு புதிய வாழ்க்கைமுறையைக் கொண்டிருக்கும் ஒரு காலத்தை குறித்து கடவுள் பேசினார். ஆனால் அது நடக்க வேண்டும் என்றால் சில விஷயங்கள் மாற வேண்டும்:

  1. மனிதர்கள் கடவுளுக்கு எதிராக, பாம்பைப் பின்பற்றத் தீர்மானித்தபோது, நாம் தோட்டத்தைவிட்டும் கடவுளோடுள்ள நெருங்கிய உறவைவிட்டும் வெளியேற வேண்டியிருந்தது. நாம் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டோம், அதைத் திரும்பப் மாற்ற முடியாது. ஆனால் கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார், அவர் நம் பாவங்களை மன்னிப்பார் என்று அறிவித்தார். முதல் மனிதர்கள் கடவுளுடன் வைத்திருந்த உறவைப் பெறுவதற்கு இது மிக முக்கியமானதாகும்.
  2. நாம் தீமையின் செல்வாக்கின் கீழ் இல்லாது இருக்கவும் இறைவனுக்கும் பாம்பிற்கும் (தீமை) இடையில் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கவும் கடவுள் நம் இதயத்தை மாற்ற வேண்டும். நாம் கடவுளைத் தேர்ந்தெடுத்தால் அதாவது நன்மையைத் தேர்ந்தெடுத்தால், கடவுளுடைய விதிகள் மீண்டும் நமக்கு பொருந்தும், ஆனால் நாம் பாம்புக்குச் செவிசாய்த்தால் நாம் மீண்டும் தீய செல்வாக்கின் கீழ் வருவோம். ஆனால், அத்தகைய முடிவை எடுப்பதற்கு நாம் முதலில் கடவுளை அறிந்து கொள்ள வேண்டும் (அவரை அறிக). எனவே எல்லோரும் அவரை தனிப்பட்ட முறையில் தெரிந்துகொள்ள முடியும் என்ற ஒரு காலத்தை குறித்து கடவுள் பேசினார். நாம் கடவுளுடன் இப்படிப்பட்ட உறவைப் பெற முடிந்தால், ஒரு புத்தகத்தின் விதிகளை நாம் பின்பற்ற வேண்டியதில்லை, அதற்கு பதிலாக கடவுள் தம் விதிகளை நேரடியாக நம் இதயங்களில் எழுதுவார், அது நம்மில் ஒரு பகுதியாக இருக்கும்.
  3. அப்பொழுது நாம் அவருடைய ஜனங்களாகி, அவர் நம்முடைய தேவனாயிருந்து, முதலில் கடவுள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்பினாரோ பல காரியங்கள் அவ்வாறே மாறிவிடும்.