1.

தோட்டம்

பகிர்
  1. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  2. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு எது மிகவும் உதவியாக இருக்கும்?
  3. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
  4. அவர்களுக்காக ஜெபியுங்கள்
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

ஆதியாகமம் 2:4-25

4இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும். 5 பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை.

6பூமியிலிருந்து தண்ணீர் எழும்பி நிலத்தை நனைத்தது.7பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.8பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார்.9தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார்.

10ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது. 11 அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று.12அந்த நாட்டில் தங்கம் இருந்தது. அத்தங்கம் நன்றாக இருந்தது. அங்கு வாசனைப் பொருள்களும் கோமேதகக் கல்லும் இருந்தன.13இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று. 14 மூன்றாவது ஆற்றின் பெயர் இதெக்கேல் அது அசீரியாவுக்கு கிழக்கே பாய்ந்தது. நான்காவது ஆற்றின் பெயர் ஐபிராத்து.

15தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார். 16 தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம். 17 ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார்.

18மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார்.

19தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான்.20மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை. 21 எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார்.22தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார்.23அப்பொழுது அவன்,

“இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி;
    அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை.
    அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது.
அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள்.
    அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான்.

24அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்.

25மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்
குறிப்புகள்

வானங்கள், பூமி, மனிதர்கள், மிருகங்கள், மற்றும் தாவரங்கள் தானாக தோன்றவில்லை. அவைகள் தேவனால் சிருஷ்டிக்கபட்டன. மனிதர்களுக்குத் தங்களையும் தாங்கள் வாழும் உலகத்தையும் கவனித்துக் கொள்ளும் ஒரு முக்கிய பொறுப்பு ஆதியில் இருந்து இருக்கிறது. எல்லாமே தேவனுடைய நன்மைத் தன்மையின் பிரதிபலிப்பாகவே இருந்தது. முழு சிருஷ்டிப்பையும் அனுபவிக்கும் சுதந்திரம் மனுஷனுக்கும் மனுஷிக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. தேவனுக்கு கீழ்ப்படிய அல்லது கீழ்ப்படியாமல் இருக்க, அவரது அன்பை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கிற தெரிந்தெடுப்பும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் தங்கள் நிர்வாணத்தைக் குறித்து வெட்கப்படாதபடிக்கும் தங்களை ஆடைகளால் மறைத்து கொள்ளவோ அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அவர்கள் இருவருக்கிடையே இருந்த நம்பிக்கை மிகவும் உயர்ந்ததாய் இருந்தது.

முக்கியமாக, நன்மைத் தீமையை அறிகிற மரத்தின் கனியை புசித்து தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருக்கும் விருப்பத்தேர்வும் அவர்களுக்கு முன் இருந்தது. ஆனால் அப்படி செய்வதன் தண்டனை மரணம் என்று தேவன் எச்சரித்து இருந்தார். அந்த மரம் மனிதர்கள் முழுமையாக தேவனுடைய சித்தத்தின் தயவில்தான் இருக்க வேண்டிய நிலை இல்லை என்பதைக் காண்பிக்கிறது. மாறாக், மனுக்குலத்திற்கு தெரிந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தது. அவர்களுக்கு தேவனுடைய அன்பை ஏற்றுக் கொள்ளும் அல்லது நிராகரிக்கிற சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.