15.

நமக்கு என்ன இருக்கிறது

பகிர்
  1. நீங்கள் எதற்காக நன்றியுடன் இருக்கிறீர்கள்?
  2. இந்த வாரம் தேவனை நீங்கள் அனுபவித்தீர்களா?
  3. கடவுளின் உதவி உங்களுக்கு எந்த காரியத்தில் தேவை?
  4. உங்கள் தேவைகளில் எப்படி நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?
  5. ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்
மறுசீராய்வு
  1. நமது கடைசி சந்திப்பிலிருந்து நடைமுறையில் நீங்கள் எதை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்?
  2. நீங்கள் யாரிடமாவது தேவனோடுள்ள அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடிந்ததா? நீங்கள் அவர்களோடு சேர்ந்து ஜெபித்தீர்களா?
வாசியுங்கள்
  1. வேதப்பகுதியை இரண்டு முறை சத்தமாக படியுங்கள்.
  2. குழுவின் உதவியுடன் தங்கள் சொந்த வார்த்தைகளில் வேதப்பகுதியை ஒரு நபர் சொல்லச் சொல்லுங்கள்.
  3. ஏதாவது விடப்பட்டதா அல்லது சேர்க்கப்பட்டதா?

லூக்கா 16:19-31

19“விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். 20 லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். 21 செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.

22“பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான்.24அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான்.

25“ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 26 மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான்.

27“செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள்.28எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான்.

29“ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான்.

30“ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.

31“ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.


அதிகமாக வாசியுங்கள்

கண்டுபிடியுங்கள்
  1. இந்த வேதப்பகுதியில் உங்களுக்கு எது தனித்து காணப்படுகிறது?
  2. இந்த வேதப்பகுதியில் எது உங்களுக்கு பிடித்து இருக்கிறது எது சங்கடப்படுத்துகிறது?
  3. கடவுளையும் மக்களையும் பற்றி இந்த வேதப்பகுதி என்ன சொல்கிறது?
செயல்படுத்துங்கள்
  1. இந்த வேதப்பகுதிக்கு பிரதிக்கிரியையாய் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அவரிடம் கேளுங்கள். அதில் ஏதாவது:
    • மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தை உள்ளதா?
    • சுதந்தரிக்க வேண்டிய ஒரு வாக்குத்தத்தம் உள்ளதா?
    • பின்பற்ற வேண்டிய ஒரு உதாரணம் உள்ளதா?
    • கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டளை உள்ளதா?
  2. அதைக் குழுவிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்